முல்லைத்தீவில் அடுத்த பயங்கரம்: கோடாலி எடுக்கச் சென்றவரிற்கு மின்னடித்தது!

Date:

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வேணாவில் 01 ஆம் வட்டரா கிராமத்தில் இன்று (16) மாலை வேளை இடியுடன் மழை பெய்து கொண்டிருந்த வேளை முற்றத்தில் உள்ள கோடாலியினை எடுக்க சென்ற குடும்பஸ்தர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

வேணாவில் கிராமத்தினை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஜெயக்குமார் (28) என்ற குடும்பஸ்தரே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

மழை பெய்து கொண்டிருந்த வேளை வீட்டு முற்றத்தில் காணப்பட்ட கோடலியினை பாதுகாப்பாக எடுத்து வைப்பதற்காக குடைபிடித்துக்கொண்டு சென்றுள்ளார். மின்னல் முற்றத்தில் நின்ற வேப்பமரத்தில் தாக்கியுள்ளது. இதன்போது குறித்த குடும்பஸ்தரும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். பிடித்து சென்ற குடையின் மீதும் மின்னல் தாக்கியுள்ளது.

வயிற்றிலும், காலிலும் எரிகாயங்களுக்கு இலக்கான நிலையில் அயலவர்களின் உதவியுடன் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கத்தால் 3 விவசாயிகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

குழந்தைகளுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறதா?: காசல் மகளிர் மருத்துவமனை விளக்கம்!

காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் குழந்தைகளுக்குப் பாலின மாற்று அறுவை சிகிச்சைகள்...

நாயுடன் உறவு விவகாரம்: வருத்தம் தெரிவித்த ஹிருணிகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்