29.8 C
Jaffna
March 29, 2024
உலகம்

கறுப்பின இளைஞனை சுட்டுக்கொன்ற பெண் பொலிஸ் அதிகாரிக்கு பிணை!

அமெ­ரிக்­கா­வில் கறுப்­பின இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்ப­வத்­தைத் தொடர்ந்து புரூக்­ளின் சென்­டர் பொலிஸ் தலைமை அதி­கா­ரி­யும், துப்­பாக்­கி­யால் சுட்ட பெண் பொலிஸ் அதி­கா­ரி­யும் தங்­க­ளது பத­வி­யி­லி­ருந்து விலகி உள்­ள­னர்.

ஞாயிற்­றுக்­கி­ழமை வீதியில் வாக­னச் சோதனை நடை­பெற்­று கொண்டிருந்­த­போது டான்ட் ரைட் (20) என்­ற இளைஞனை அதி­கா­ரி­கள் இடை­ம­றித்­த­னர். அவ­ரது வாக­னப் பதிவு ஏற்கனவே காலா­வ­தி­யா­கி­விட்­ட­தைத் தொடர்ந்து, அதிகாரிகளால் காரை­ விட்டு
வெளி­யேற்­றப்­பட்ட அவருக்கு கைவி­லங்­கிட முயன்­ற­னர்.

அப்­போது அத­னைத் தடுத்து காரில் ஏற முயன்­ற­ இளைஞன் நெஞ்­சில் சுடப்­பட்­டார்.       பின்­னர் அவர் உயிரிழந்தார். இச்­சம்­ப­வம் கறுப்­பின மக்­கள் உள்­ளிட்ட பலரை சினம் கொள்­ளச் செய்­தது.

அத­னைத் தொடர்ந்து இரு நாட்­க­ளாக மின­சோட்­டா­வின் ஆகப் பெரிய நக­ரான புளூக்­ளின் சென்­ட­ரில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன. இளை­ஞனை சுட்ட அதி­காரி 48 வயது பெண் பொலிஸ் அதி­கா­ரி­யான கிம் போட்­டர் ஆவார்.

சம்­ப­வத்தை விசா­ரித்த தலைமை பொலிஸ் அதி­காரி டிம் கானன், சம்­ப­வம் ஒரு விபத்து என்­றும் மின்­ன­திர்ச்சி ‘டேசர்’ துப்­பாக்­கியை பணிக்கு எடுத்­துச் செல்­வ­தற்­குப் பதி­லாக  தவ­று­த­லாக உண்­மை­யான கைத்­துப்­பாக்­கியை அதி­காரி எடுத்­துச் சென்­று­  பயன்படுத்தியதா­க­வும் கூறி­னார்.

இத­னைத் தொடர்ந்து இந்த இரு அதி­கா­ரி­க­ளை­யும் பணி நீக்க நகர மன்­றத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக புரூக்­ளின் சென்­டர் மேயர் மைக் எலி­யட் கூறி­னார்.

அத­னைத்தொடர்ந்து பொலிஸ் தலைமை அதி­காரி டிம் கேன­னும் துப்­பாக்­கிச்­சூடு        நடத்­திய கிம் போட்­ட­ரும் செவ்­வாய்க்­கி­ழமை பணி வில­கல் கடி­தத்­தைக் கொடுத்­த­னர்.

இதில், கிம் போட்டர் நேற்று புதன் கிழமை மாலை கைது செய்யப்பட்டு, சில மணித்தியாலத்தில் விடுவிக்கப்பட்டார். ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment