இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் நம்ம ஊரு இயக்குனர் ஷங்கர்.
கடைசியாக ஷங்கர் இயக்கிய ‘2.0’ படம் நல்ல வசூல் பெற்றாலும் ‘பாகுபலி’ வசூலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
இந்தியன் படத்திற்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். தற்போது விக்ரம் படத்தினால் கமல் பிசியாக இருப்பதால் இந்த படத்தின் படிப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது.
தற்போது சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவை வைத்து படம் இயக்கப் போவதாகவும், அதன்பின் 2022ஆம் ஆண்டில் ஹிந்தி நடிகரான ரன்வீர் சிங்கை வைத்து நம்ம அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாகவும், அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லைக்கா ஏதாவது நோட்டீஸ் அனுப்பும் என்று பார்த்தால் அங்க தான் கடவுள் வைத்தார் டுவிஸ்ட்.
இந்த நிலையில், அந்நியன் திரைப்படத்தை ரீமேக் செய்ய முறையான அனுமதி பெறவில்லை என அப்படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அப்படத்திற்கான ரீ மேக் உரிமைகள் தன்னிடம் இருப்பதாகவும் சுஜாதாவிடம் ரூ.5 லட்சம் பணம் கொடுத்து அந்த உரிமையை தான் பெற்றிருப்பதாகவும், மேலும் அந்நியன் படத்திற்கு முன்னர் “பாய்ஸ்” என்னும் படத்தினால் ஷங்கருக்கு ஏற்பட்ட மன உளைச்சலில்ல் இருந்து நான் தான் அந்நியன் படம் மூலமாக அவரை மீட்டு எடுத்தேன். இந்த சிறு நன்றி கூட இல்லாமல் என்னுடைய அந்நியன் படத்தை ஹிந்தியில் என்னைக் கேட்காமல் எப்படி ரீமேக் செய்வீர்கள்?” என மிரட்டும் தொனியில் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.