பள்ளிமுனை மீனவர்கள் மீது கடற்படை தாக்குதல்!

Date:

மன்னார் பள்ளிமுனையில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை(13) இரவு மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது நேற்று நள்ளிரவு இரணை தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக தெரிய வருகின்றது.

மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் இருந்து படகு ஒன்றில் 4 மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கடற்தொழிலுக்குச் சென்றுள்ளனர்.

கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் பள்ளிமுனை கடற்கரையில் உள்ள கடற்படையினரின் சோதனை மற்றும் பதிவுகளை மேற்கொண்ட நிலையில் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

இதன் போது நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இரணை தீவு கடற்பரப்பில் வைத்து கடல் றோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த படகை நிறுத்தி சோதனையிட்டதோடு தேவையற்ற காரணத்தை கூறி குறித்த 4 மீனவர்களையும் சுமார் 3 மணி நேரம் கடலில் தடுத்து வைத்ததாகவும், பின்னர் கடற்படையினர் கொண்டு வந்த தடியினால் மீனவர்களை தாக்கியதோடு, மீனவர்களின் தொலைபேசி மற்றும் டோச் லைட் போன்றவற்றை பறித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பள்ளிமுனை கடற்படை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

spot_imgspot_img

More like this
Related

லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன்...

வவுனியா மாநகர முதல்வரை பதவிநீக்கும் ஆளுனரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை

வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும்...

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்