திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா

Date:

திமுக பொருளாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் மிகக் குறைவாக இருந்த தொற்று எண்ணிக்கை திடீரென இரண்டாவது பரவல் காரணமாக வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தலைவர்களுக்கும் தொற்று ஏற்பட்டது.

பிரச்சாரத்தின்போதே பல வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மக்களவை திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி பிரச்சாரம் முடிந்த அன்றே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கொரோனாவால் பாதிக்கப்பட்டார். திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திமுகவின் பொருளாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மகனும், திமுக எம்எல்ஏவுமான டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

spot_imgspot_img

More like this
Related

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகளும் முன்னெடுப்பு! தியாகி...

அட்டாளைச்சேனையில் மாணவிகளை துன்புறுத்தியதாக விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

ஆபாசக் காணொளிகளைக் காட்டி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்