சீனத் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ராஜபக்ஷ அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சீன அரசாங்கத்தின் மிக உயர்மட்ட தலைவரின் விஜயம் இதுவாகும்.
ஜெனரல் வெயியின் வருகையின் இறுதி திகதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், புத்தாண்டுக்குப் பிறகு இந்த விஜயம் நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனது வருகையின் போது, வெய் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார். மூத்த சீன இராஜதந்திரி, யாங் ஜீச்சியின் ஒக்டோபரில் விஜயம் செய்ததைத் தொடர்ந்து சீன அதிகாரி ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டாவது மிக உயர்ந்த விஜயம் இதுவாகும்.
இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்தில் இரு தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் புதிய அழைப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பெய்ஜிங்கிற்கு பயணிப்பதற்கான திகதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அனேகமாக அடுத்த மாதம் இந்த விஜயம் இடம்பெறலாமென தெரிவிக்கப்படுகிறது.