கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு ரூ .5 ஆயிரம் கொடுப்பனவை வழங்க அரசு தொடங்கிய திட்டம் இன்று (12) ஆரம்பிக்கிறது.
அதன்படி, 7 வகைப்பாட்டுக்குள் உள்ளடங்குபவர்களிற்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
சமுர்த்தி பயனார்கள், குறைந்த வருமானமீட்டுபவர்கள், முதியோர் கொடுப்பனவு பெறுபவர்கள், மாற்றுத்திறனாளிகளிற்கான கொடுப்பனவு பெறுபவர்கள், சிறுநீரக நோயாளிகள், மற்றும் மேல்முறையீட்டை சமர்ப்பித்தல்வர்கள் இந்த கொடுப்பனவை பெற தகுதியுடையவர்கள்.
இன்றும் நாளையும் சமுர்தி வங்கிகள் மூலம் கொடுப்பனவு வழங்கப்படும். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக கொடுப்பனவை வழங்கி முடிக்க முடியுமென சமுர்த்தி மற்றும் வீட்டு பொருளாதார அமைச்சர் ஷெஹன் செமசிங்க தெரிவித்தார்.
இருப்பினும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ரூ .5,000 கொடுப்பனவை வழங்குவதற்கான திட்டம் வெற்றிபெறாது என்று சமுர்த்தி மற்றும் கிராம சேவகர்கள் கூறுகின்றனர்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய இலங்கை கிராம சேவகர் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிக்கர, இந்த திட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கப்போவதில்லை என்று கூறினார்.
அரசாங்கம் அவசரமாக எடுத்த முடிவு, அரச அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையிலான மோதல்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.



