புத்தாண்டை முன்னிட்டு இன்று (12) விசேட விடுமுறை என்று அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் இன்று திறந்திருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, வேலை நேரத்தில் வங்கிகளில் அனைத்து பரிவர்த்தனைகளையும் பொதுமக்கள் மேற்கொள்ள முடியும்.
COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு ரூ. 5,000 கொடுப்பனவு இன்றும் நாளையும் சமுர்தி வங்கிகள் மூலம் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகங்கள் இன்று திறந்திருக்கும். இன்றைய தினத்தில் சேவையை பெற ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், இன்று தடையின்றி அலுவலகங்களில் சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1