நேற்று 284 பேருக்கு தொற்று!

Date:

நேற்று 284 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை நாட்டில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 94,848 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 214 பேர், பேலியகொட கோவிட் -19 கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும், 54 பேர் சிறைச்சாலைகளில் இருந்து அடையாளம் காணப்பட்டதாகவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்த 16 பேரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த 184 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,456 ஆக உயர்த்ந்துள்ளது.

தற்போது 2,796 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 291 சந்தேகத்திற்குரியவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்