திருமணமா?: சுனைனா வெளியிட்ட தகவல்!

Date:

திருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தி என்று நடிகை சுனைனா கூறியுள்ளார்

தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து ‘நீர்ப் பறவை’,‘வம்சம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு ஹலிதா ஷமீம் சுனைனா இயக்கத்தில் வெளியான ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் ‘ராஜ ராஜ சோரா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் சுனைனா நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுனைனாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்கலில் தகவல்கள் பரவின. இதற்கு சுனைனா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

நான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தொடர்ந்து வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை. என்னுடைய திரைப்படங்கள் தான் பேச வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. பல வகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. மேலும் சில இயக்குநர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் குற்றச்சாட்டில் 9,000 இற்கும் அதிக சிறார்கள் கைது

கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் தற்போது வரை, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின்...

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்