ஒற்றையாட்சியால்தான் தமிழீழ கனவை தவிடுபொடியாக்கினோம்; இனி காலம் முழுக்க ஒற்றையாட்சிதான்: வீரசேகர வீராப்பு!

Date:

புதிய அரசியலமைப்பிலும் ஒற்றையாட்சியே பேணப்படும். ஒற்றையாட்சியால் நாடு எந்த பேரழிவையும் சந்திக்கவில்லை. சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பெயருக்கே இங்கே இடமில்லையென தெரிவித்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.

புதிய அரசியலமைப்பிற்கா ன நிபுணர் குழுவிடம் தமது யோசனையை சமர்ப்பித்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர், சமஷ்டி அல்லது கூட்டாட்சியை முன்மாழிந்திருந்தனர். அத்துடன் ஒற்றையாட்சி முறைமையினால்தான் நாடு பேரழிவை சந்தித்து வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த விடயத்தை தமிழ் மக்கள் கூட்டணி சுட்டிக்காட்டியால் கொதித்து போன வீரசேகர,

சமஸ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இந்த ஆட்சியில் இடமில்லை. இந்த முறைமைகள் புதிய அரசியலமைப்பில் இருக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் அணியினர் கனவு காணக்கூடாது. நடைமுறையிலிருக்கும் ஒற்றையாட்சி முறைமை மூலம் தான் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். புதிய அரசியல் அமைப்பிலும் இது தொடர்பில் தெளிவாக குறிப்பிடப் படும்.

ஒற்றையாட்சி முறையினால் இந்த நாடும் பேரழிவுகளை சந்திக்கவில்லை. பேரழிவை நோக்கி சென்று கொண்டிருந்த நாட்டை மீட்டெடுத்தோம். புலிகளின் தமிழீழ கனவை தவிடுபொடியாக்கினோம். அவர்களை இல்லாதொழிந்தோம்.

சமஷ்டி, கூட்டாட்சி முறைதான் பிரிவினைக்கு வழிவகுக்கும். அது நாட்டை பிளவுபடுத்தும், நாட்டின் நல்லிணக்கத்திற்கு பாதகமாக அமையும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று இறுதி நாள் முன்னெடுப்பு!

தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில்...

இனவாதம், மதவாதத்தை தூண்டி அரசியல் மாற்றத்துக்கு சதி – கவீந்திரன் கோடீஸ்வரன் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக்...

குற்றச்செயல்களில் தொடர்புடைய இருவருடன் மது அருந்திய பொலிஸ் அதிகாரி இடைநீக்கம்!

வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் சேர்ந்து மதுபானம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்