யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
“யாழ் மாநகர காவல்படை உருவாக்கத்தில், சபையுடன் கலந்துரையாடி செயற்பட்டிருக்க வேண்டும்.
எனினும், இந்த விடயத்தில் அரசாங்கம் அவரை கைது செய்தது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எந்தவிதமான விசாரணையுமின்றி அவரை கைது செய்தது கண்டிக்கப்பட வேண்டியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்“ என தெரிவித்துள்ளார்.