29.8 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

நகரை சுத்தமாக வைத்திருக்க எடுத்த நடவடிக்கை தவறெனில், அந்த தவறை தொடர்ந்து செய்வோம்: மணிவண்ணன் அதிரடி அறிவிப்பு!

இலங்கை சட்டம் ஒழுங்கு துறையின் கரிநாள் இன்று. யாழ் மாநகரசபையின் சுயாதீன செயற்பாட்டிற்கு பொலிசார் அச்சுறுத்தல் விடுத்த கேவலமான நாள். எங்களுடைய சுயாதீன செயற்பாட்டை ஊறு விளைவிக்கும் எந்த அதிகாரமும் பொலிசாருக்கு கிடையாது. யாழ் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க நான் எடுத்த நடவடிக்கை தவறா? அது தவறெனில், தொடர்ந்தும் அந்த தவறை நாம் தொடர்ந்தும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளோம் என முழங்கியுள்ளார் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன்.

மாநகர காவல்படையினருக்கு நீல நிறத்தில் சீருடை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ் மாநகர முதல்வரை பொலிசார் கைது செய்திருந்தனர். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்திய பொலிசார், முதல்வரை விளக்கமறியலில் வைக்க கோரிக்கை விடுத்தனர். எனினும், நீதிவான் அந்த கோரிக்கையை ஏற்காமல் மணிவண்ணனை பிணையில் விடுவித்தார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.மணிவண்ணன்,

நேற்று மாலை 6-7 மணியளவில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொலிஸ் நிலையம் வருமாறு அழைத்திருந்தார்.

அங்கு சென்ற போது, புதன்கிழமை நடந்த சம்பவம் பற்றி வாக்குமூலம் பெற்றார்கள். இரவு 2 மணியளவில், என்னை கைது செய்வதாகவும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இரவோடு இரவாக என்னை வவுனியாவிற்கு கொண்டு சென்றனர். வவுனியாவில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரினால் வாக்குமூலம் பெறப்பட்டது.

நான் அவர்களிடம் சொன்னேன், மாநாகரசபையின் செயற்பாடு இது. மாநகரசபையின் செயற்பாடு சட்டவரம்பை மீறினால், அது இந்த நாட்டில் பயங்கரவாதமா? பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழா நீங்கள் கையாள போகிறீர்கள் என்பதை கேட்டேன்.

நீதிமன்றத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் அல்லாமல், சாதாரணதண்டனைக் கோவைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இது உண்மையில், இலங்கை சட்டம் ஒழுங்கு துறையின் கரிநாள் இன்று. யாழ் மாநகரசபையின் சுயாதீன செயற்பாட்டிற்கு பொலிசார் அச்சுறுத்தல் விடுத்த கேவலமான நாள். எங்களுடைய சுயாதீன செயற்பாட்டை ஊறு விளைவிக்கும் எந்த அதிகாரமும் பொலிசாருக்கு கிடையாது.

எங்களது அரச உத்தியோகத்தர்களின் கடமையில் பொலிசார் தேவையற்ற விதத்தில் தலையிடுகிறார்கள். என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.  இது தொடர்பாக தேவையான அனைத்து இடங்களிலும் சட்டரீதியாக போராட நான் தயாராக இருக்கிறேன்.

யாழ் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க நான் எடுத்த நடவடிக்கை தவறா? அது தவறெனில், தொடர்ந்தும் அந்த தவறை நாம் தொடர்ந்தும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளோம்.

பொலிசாரின் அராஜகத்தை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இந்த விவகாரத்தை அனைத்து இடங்களிற்கும் கொண்டு சென்று போராடுவேன்.

நாளை எனது வழமையான கடமைக்கு திரும்புவேன் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment