யாழ்ப்பாணத்திற்கு தனி பொலிசா?; இலங்கையில் 2 பொலிசா?: நாடாளுமன்றத்தில் வெடித்தது சர்ச்சை!

Date:

நாட்டில் ஒரே சட்டம் இருந்தால், ஒரே காவல்த்துறைதான் இருக்க முடியும். போக்குவரத்து கடமைக்காக யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் காவல்த்துறையின் சீருடையில் இன்னொரு குழு களமிறக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  கின்ஸ் நெல்சன் தெரிவித்தார்.

இன்று (8) நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன்,

இலங்கை ஒரே நாடு, ஒரே சட்டம் என அரசாங்கம் கூறுகிறது. நாட்டில் ஒரு காவல்த்துறை  மட்டுமே உள்ளது. ஆனால், யாழ்ப்பாண மாவட்ட மேயர் போக்குவரத்தை கட்டுப்படுத்த ஒரு தனி குழுவை நியமித்துள்ளார்.

இந்த குழுவிற்கு விடுதலைப் புலிகளைப் போலவே ஒரு சீருடையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சாமல் ராஜபக்ஷ , பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என்றும், எம்.பி. கிங்ஸ் நெல்சனையும் கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை முன்வைக்க அழைப்பு விடுத்தார்.

spot_imgspot_img

More like this
Related

குழந்தைகள் வாழும் இடத்தில் மதுபானசாலையா?” – புங்குடுதீவு மாணவர்கள் போராட்டம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில்...

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று இறுதி நாள் முன்னெடுப்பு!

தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில்...

இனவாதம், மதவாதத்தை தூண்டி அரசியல் மாற்றத்துக்கு சதி – கவீந்திரன் கோடீஸ்வரன் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்