திருமதி அழகுராணி போட்டி சர்ச்சை: முன்னாள் உலக அழகி கைது!

Date:

2021ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பில் 2020 ஆம் ஆண்டில் திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி மற்றும்  மொடல் அழகி சுலா பத்மேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள புஷ்பிகா டி சில்வா, கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் கரோலின் ஜூரிக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.

திருமதி இலங்கை அழகி போட்டியில் புஷ்பிகாவுக்கு முடிசூட்டப்பட்டு சிறிது நேரத்தில் ஜூரி, அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதாவது, வெற்றியாளர் விவாகரத்து செய்யப்பட்டவர். அத்தகைய ஒருவர் இதில் போட்டியிட முடியாது. எனவே இரண்டாவது வெற்றியாளர், முதலாவது வெற்றியாளராக தெரிவு செய்யப்படுகிறார் என அறிவித்தார்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்ததுடன் பாதிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா, தான் விவாகரத்தானவர் இல்லை என அறிவித்ததுடன் பொலிஸிலும் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜீரியின் இந்த அறிவிப்பு உண்மைக்கு புறம்பானது என ஏற்பாட்டுக்குழு விளக்கம் அளித்ததோடு, பின்னர் புஷ்பிகாவை வெற்றியாளராக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை  கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திரா ஆகியோர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது. கிரீடம் கழற்றும் போது தனக்கு தலையில் காயம் ஏற்பட்டது என புஷ்பிகா டி சில்வா மருத்துவ அறிக்கை சமர்ப்பித்தார்.

இதையடுத்து, கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்