மின்சாரசபை ஊழியர்கள் சுகயீன விடுப்பு!

Date:

பல வருடங்களாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (08) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்தார்.

சுமார் 25 ஆயிரம் மின்சார ஊழியர்கள் கொழும்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நூற்றுக்கு 25 சதவீத சம்பள அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்