நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா என நெட்டிசன்கள் குழம்பிப் போயுள்ளனர்.
நயன்தாரா என்ன செய்தாலும் அது செய்திதான் என்றாகி விட்டது. அண்மையில் மோதிர புகைப்படம் ஒன்றை வெளியிட, நயன்தாராவிற்கு திருமணமாகி விட்டது என செய்தி பரவியது.
இப்போது அடுத்த செய்தி தீயாக பரவுகிறது.
திருமணம் ஆனால் அடுத்தது என்ன? அதேததான். நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் என, புகைப்படமொன்றை நெட்டிசன்கள் பகிர ஆரம்பித்துள்ளனர்.
நயன்தாராவும், காதலர் விக்னேஷ் சிவனும் செல்லுமிடமெல்லாம் காதல் ரசம் ததும்ப ததும்ப புகைப்படம் எடுத்து வெளியிட்டு, பழைய காதலர்களை வெறுப்பேற்றி வருகிறார்.
அந்த வகையில் லேட்டஸ்டாக வெளியிட்ட புகைப்படமொன்றே, கர்ப்ப சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் உண்மையில் கர்ப்பமாகவே இருக்கிறாரா அல்லது அந்த ஆடை அப்படி தோன்றுகிறதா என நெட்டிசன்கள் படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.



