32 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

Date:

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சந்தேக நபர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடிந்துவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீரசேகர, விசாரணையைத் தொடர்ந்து 32 முக்கிய குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளதாக கூறினார்.

எட்டு விசாரணைக் கோப்புகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் தொகுக்கப்பட்ட அறிக்கையைப் பெறும் வரை சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க சட்டமா அதிபர் விரும்பாததால் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் சட்ட நடவடிக்கை எடுப்பது சட்டமா அதிபரின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டமா அதிபர் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடாமல் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய முடியாது. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதில் தாமதத்திற்கு அரசாங்கத்தை குறை கூற முடியாது என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலே கழிப்பறைக்கு செல்வதென்றாலும் கோட்டாவிடம் கேட்பார்!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹாரன் ஹாஷிம் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு மேஜர்...

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....

கனடாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான தமிழன்!

கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்