Pagetamil
விளையாட்டு

ஆர்சிபி அணியில் 2வது வீரருக்கும் கொரோனா தொற்று

ரோயல்ஸ் சலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி வீரரும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டானியல் சாம்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்சிபி அணியில் 2வது வீரர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் ஐபிஎல் டி20 தொடரையும் விட்டுவைக்கவில்லை. வீரர்கள் கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தபோதிலும், அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு 4வது வீரர் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி அணியில் ஏற்கெனவே தேவ்தத் படிக்கல் கொரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அவுஸ்திரேலிய வீரர் டானியல் சாம்ஸும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 4வது வீரர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே டெல்லி கபிடல்ஸ் வீரர் அக்ஸர் படேல், ஆர்சிபி வீரர் படிக்கல், கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் ராணா மட்டும் குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து ஆர்சிபி அணி வெளியிட்ட அறிக்கையில்,

“அவுஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸ் கடந்த 3 ஆம் திகதி வந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2 வது பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டானியல்ஸ் சாம்ஸ் தற்போது எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், நலமாக இருக்கிறார், தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். ஆர்சிபி அணியின் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சாம்ஸுடன் தொடர்பில் உள்ளனர், அவரின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். பிசிசிஐ அமைப்பின் அனைத்துவிதமன கொரோனா தடுப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும்” எனத் தெரிவி்க்கப்பட்டது.

வரும் 9ஆம் திகதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது ஆர்சிபி அணி. தேவ்தத் படிக்கல் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதால், முதல் 3 ஆட்டங்களுக்கு படிக்கல் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, தற்போது டானியல் சாம்ஸும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவராலும் அடுத்த 10 நாட்களுக்கு எந்த போட்டியிலும் பங்கேற்க முடியாது.

இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பிங் ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான கிரண் மோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மற்ற வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

Leave a Comment