பதுளை சிறைச்சாலைக்குள் தூக்கில் தொங்கி உயிரை மாய்க்க முயற்சித்த போது, சிறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு பதுளை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு கைதி இன்று உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிசார் தெரிவித்தனர்.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபரை பதுளை பொலிசார் கைது செய்து பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் விளக்கமறியலில் வைத்தனர்.
இந்த நிலையிலேயே அவர் உயிரை மாய்த்துள்ளார்.



