28 C
Jaffna
April 15, 2021

உலகம்

போதைப்பொருள் பாவனைக்காக இரண்டாவது முறையும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மொடல் அழகி!

போதைப்­பொ­ருள் பாவனை, திருட்டு, இடை­யூறு ஏற்படுத்தல் உள்ளிட்ட குற்­றச்­சாட்­டு­கள் சுமத்தப்பட்ட சிங்கப்பூர் மொடல் அழ­கி­ டென­ஷா­ருக்கு 18 மாத சிறைத் தண்­டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெப்பி வேலரி டென­ஷார் லோங் எனும் அந்த மொடல் அழ­கிக்கு 2019ஆம் ஆண்­டி­லும் போதைப்­பொ­ருள் உட்­கொள்­வது உள்­ளிட்ட குற்­றங்­க­ளுக்­காக 18 மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது குறிப்பிடத்தக்கது.

தற்­போது 35 வய­தா­கும் லோங், 2019ஆம் ஆண்டு விதிக்­கப்­பட்ட தண்­ட­னை­யின் போது, தண்டனை காலத்தை முழுமையாக கழிப்பதற்கு முன்­ன­தா­கவே சிறை­யி­லி­ருந்து            விடு­விக்­கப்­பட்­டார். 2019ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி முதல் நவம்­பர் மாதம் 25ஆம் திகதிக்கு உட்­பட்ட காலத்­தில் அவர் குற்­றச் செயல்­கள் ஏதும் புரி­யா­மல் இருக்­கு­மாறு ஆணை­யி­டப்­பட்­டி­ருந்­தார்.

அந்த ஆணையை மீறி­ய­தற்­காக இப்­போது அவர் 72 நாட்­கள் மேலதிகமாக சிறை­யில் கழிக்க வேண்­டி­யி­ருக்­கும்.

2019ஆம் ஆண்டு ஜூலை மற்­றும் செப்­டம்­பர் மாதங்­களில் சிறு­நீர்ப் பரி­சோ­த­னைக்காக 6 தடவை முன்­னி­லை­யா­கத் தவ­றி­யது உட்­பட 9 குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­ப­ண­மா­ன­தாக ஐந்து நாள் விசா­ர­ணைக்­குப் பிறகு மாவட்ட நீதி­பதி எட்டி தாம் தெரி­வித்­தார்.

மேலும், கண்­கா­ணிப்பு அதி­கா­ரி­யின் அனு­மதி இன்றி 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி சட்­ட­வி­ரோ­த­மாக அவர் வெளி­நாட்­டுக்­குச் சென்­ற­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

பாது­காக்­கப்­பட்ட இட­மான ஜூரோங் போலிஸ் தலை­மை­ய­கத்­தில் உள்ள மத்­திய போதைப்­ பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அலு­வ­ல­கத்­தில் ஒரு காணொ­ளியை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி­யன்று லோங் பதிவு செய்­தார்.

தாய்­லாந்­தின் பிளே­பாய் சஞ்­சி­கை­யின் அட்­டைப்­ப­டத்­தில் கடந்த 2013ஆம் ஆண்டு  இடம் பிடித்த லோங், பிரிட்­டிஷ் இசை சஞ்­சி­கை­யின் ‘டிஜே மேக்’ பட்­டி­ய­லில் 87வது இடம் பிடித்திருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கொரோனா தடுப்பூசியை இரகசியமாக போட்டுக் கொண்ட ட்ரம்ப்!

Pagetamil

சிட்னியில் 60 ஆண்டுகளின் பின் பெருவெள்ளம்!

Pagetamil

உலகின் தலை சிறந்த Teladoc ரோபோ இந்தியாவில் முதல் முறையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில்!!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!