யாழில் மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட 15 பேருக்கு தொற்று… ஒருவர் உயிரிழப்பு!

Date:

வடமாகாணத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த 15 பேரும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகிறார்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் இன்று 761 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் 16 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவர், பருத்தித்துறை வைத்தியசாலை நோயாளர் விடுதியில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் நாவாந்துறையைச் சேர்ந்தவர். இதுவரை யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் 4  பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

யாழ்ப்பாணம் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் பாற்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மூவர் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

மற்றொருவர் யாழ் நகரில் வங்கி ஒன்றில் பணியாற்றும் கொக்குவிலில் வசிப்பவர்.

வவுனியா பொது வைத்தியசாலை விடுதி ஒன்றில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 71 வயதுடைய முதியவர் நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வசிப்பவர்.

spot_imgspot_img

More like this
Related

11 கொலைகள் செய்த பாதாள உலக துப்பாக்கிதாரிக்கு தமிழ் பெயரில் போலி அடையாள அட்டை: வசமாக சிக்கிய விதானையார்!

தலங்கம, அகுரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் சட்டத்தரணி மற்றும்...

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்