பீல்ட் மார்ஷலிற்கு இராணுவத்தால் சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படுவதில்லை!

Date:

பீல்ட் மார்ஷல் பதவி வகிப்பவர்களுக்கு இராணுவத்தால் சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படுவதில்லை. ஆனால் வாழ்நாள் வரையில் பீல்ட் மார்ஷல் பதவி நீடிக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளுங்கட்சி உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பீல்ட் மார்ஷல் பதவியென்பது இராணுவத்தில் உள்ள உயர் பதவியாகும். இராணுவச் சம்பிரதாயங்களுக்கு அமைவாக பீல்ட் மார்ஷல் பதவியும், அதற்கு இணையாக கடற்படையில் உள்ளவர்களுக்கும் அப்பதவி வழங்கப்படுகின்றது. அப்பதவியைப் பெறுபவர்கள் வாழ்நாள் வரையில் அந்த பதவியில் இருப்பார்கள்.

அத்துடன் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அவரது பணியாள் தொகுதிக்காக 19 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவருக்குப் படையினரின் உத்தியோகபூர்வ காரொன்றும் வழங்கப்பட்டுள்ளது, சரத் பொன்சேகாவுக்கு உத்தியோகபூர்வ இல்லம் எதுவும் வழங்கப்படவில்லை.

மேலும் அட்மிரல் கரன்னகொடவுக்குப் பணியாள் தொகுதிக்காக 09 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு உத்தியோகபூர்வ வாகனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. பணியாள் தொகுதியினரின் பாவனைக்காக ஜீப் ரக வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது.

விமானப் படையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற டபிள்யூ.டி.ஆர்.ஜே. குணதிலகவுக்கு பணியாள் தொகுதிக்காக 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளதோடு, உத்தியோகபூர்வ இல்லமோ, வாகனமோ வழங்கப்படவில்லை.

அத்துடன் பீல்ட் மார்ஷல் பதவி வகிப்போருக்கு சம்பளமோ அல்லது ஓய்வூதியங்களோ வழங்கப்படுவதில்லை என்றார்.

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்