தமிழர்களை காப்பாற்றிய இராணுவத்தின் மீது நடவடிக்கையா?: பொங்குகிறார் அஸ்கிரிய பீடாதிபதி!

Date:

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிராக முழு நாடும், கட்சி பேதங்களை பொருட்படுத்தாமல் அணிதிரள வேண்டு என அஸ்கிரி பீட மகாநாயக்கர் வாரககொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான கட்டத்தில் நாம் ஒரு நாடாக ஐக்கியப்படாவிட்டால், எங்களுக்கு எதிரான சக்திகள் பயனடைகின்றன என்றும் அவர் கூறினார்.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று (4) அஸ்கிரிய பீடத்திற்கு சென்று, மகாநாயக்கரின் ஆசீர்வாதத்தைப் பெற்றபோது மகாநாயக்கர் இதனை தெரிவித்தார்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் வடக்கில் அப்பாவி தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற இலங்கை இராணுவம் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதை உலகம் கண்டது, இந்த நேரத்தில் சில புலிகள் சார்பு குழுக்களால் நம் நாட்டிற்கு அழுத்தம் கொடுக்கப்படுவதை நாம் இனம், மதம் அல்லது கட்சி இணைப்புகளைப் பொருட்படுத்தாமல் ஒன்றாக நின்றால் மட்டுமே தோற்கடிக்க முடியும்’ என்றார்.

பாடசாலை மாணவர்களின் கழுத்தில் சயனைடு தொங்கவிட்டு பயங்கரவாதத்திற்கு தூண்டிய அடெல் பாலசிங்கம் போன்றவர்கள் இப்போது பிரிட்டனில் வசித்து வருவதாகவும், இலங்கை மனித உரிமை மீறல்கள் என்று குற்றம் சாட்டியவர்கள் இது குறித்து மௌனமான கொள்கையை பின்பற்றி வருவதாகவும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகும், ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தால் இலங்கையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குழப்பமானவை என்று அவர் கூறினார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த பல குற்றச்சாட்டுகள் போருடன் தொடர்புடையவை அல்ல என்றும், நாட்டின் உள்நாட்டு விவகாரங்களான அரசியலமைப்பு மற்றும் மூன்று ஆயுதப்படைகளின் தளபதிகளை நியமிப்பது போன்றவற்றை அவர்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாகவும், இலங்கைக்கு எதிராக இந்த முறையில் செயல்படும் சக்திகளை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒரு பொதுவான உடன்படிக்கைக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...

இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு வரலாற்றிலேயே...

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்