31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

1000 ரூபா வர்த்தமானிக்கு எதிரான மனு விசாரணைக்கு திகதி நிர்ணயம்!

தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவிப்பதற்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செயலற்றதாக்குமாறு கோரி 20 தோட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு உட்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்ன கொரயா ஆகிய நீதிபதிகளினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு தொடர்பான விசாரணைகளை மே மாதம் 5 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதுடன் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்கமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக அமைச்சர் நிமல் சிறிபால சில்வா, தொழிலாளர்கள் ஆணையாளார் உட்பட 19 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment