யாழ் கல்வி வலய பாடசாலைகளிற்கு மேலும் ஒருவாரம் விடுமுறை!

Date:

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்தார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்பட்ட கோரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 29ஆம் திகதி தொடக்கம் கடந்த வாரம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.

எனினும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு விடுமுறை இன்று தொடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்படுகிறது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் வரும் ஏப்ரல் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பித்திலேயே திறக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்