27.3 C
Jaffna
April 15, 2021

இலங்கை

மாங்குளத்தை அண்டிய பகுதிகளில் கனமழை, காற்று: பல வீடுகள் சேதம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளில் நேற்று மாலை கனமழையுடன் வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

நேற்று மாலை 4.30 மணி அளவில் கிழவன்குளம், பனிக்கன்குளம், மாங்குளம் பகுதிகளில் கன மழை பொழிந்தது. இதன்போது திடீரென வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு பல சேதங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.

வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு உள்ளதோடு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பல பொருட்களும் நாசமாகி உள்ளன கிழவன்குளம் பகுதியில் வாழ்வாதாரத்திற்காக கோழிப்பண்ணை நடத்தி வந்த ஒருவருடைய கோழிப்பண்ணையில் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து கோழிக்கூடு சேதமடைந்துள்ளதோடு கோழிகள் பல உயிரிழந்துள்ளன.

கிராம அலுவலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்களுடைய நிலைமைகளை நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நேற்றைய தொற்றாளர் விபரம்!

Pagetamil

பீல்ட் மார்ஷலிற்கு இராணுவத்தால் சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படுவதில்லை!

Pagetamil

யாழில் அரசியல்மயப்பட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து குழப்பம்: அங்கஜன் தரப்பில் அடாவடி தொடர்கிறது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!