29.3 C
Jaffna
April 22, 2021

இலங்கை

மலசலகூடத்திற்குள் 17 கிலோ தங்கம்: இலங்கையில் மிகப்பெரிய தங்கக்கடத்தல் முறியடிப்பு!

சர்வதேச தங்கக் கடத்தல் மோசடி இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் முறியடிக்கப்பட்டுள்ளது, இலங்கையில் முறியடிக்கப்பட்ட மிகப்பெரிய தங்கக் கடத்தல் முயற்சி இதுவாகும்.

சுங்க அதிகாரிகள் ரூ .220 மில்லியன் மதிப்புள்ள 17 கிலோ தங்க பிஸ்கட்களை சனிக்கிழமை மாலை பறிமுதல் செய்தனர்.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து விமான நிலையத்தில் பணியாற்றிய ஒரு காவலாளி கைது செய்யப்பட்டார்.

பயணி ஒருவர் கழிப்பறையில் தங்கத்தை மறைத்து வைத்ததை தொடர்ந்து, மெருகூட்டல் இயந்திரத்தினால் அந்த இடத்தை மறைத்து வைத்துக் கொள்ள முயன்ற பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

பொலிதீனில் மூடப்பட்டு, கழிப்பறையின் வடிகால் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அது காவலாளியால் சேகரிக்கப்பட்டது.

காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் காவலாளியை தடுத்து சோதனையிட்ட போது, 161 தங்க பிஸ்கட்டுக்கள் மீட்கப்பட்டன.

அதன்பிறகு நேற்று காலை வருகை முனையத்தில் மற்றொரு கழிப்பறையிலிருந்து 1.5 கிலோ தங்க நகைகள் அடங்கிய மூன்று பொட்டலங்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக காவலாளி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Related posts

துரைராஜா விருதில் முல்லைத்தீவு மாணவனிற்கு அநீதி; யாழ்.பல்கலை முன் போராடுவோம்: எச்சரிக்கிறார் இளஞ்செழியன்

Pagetamil

மூங்கிலாற்றில் சிவன் சிலை: மல்லுக்கட்டும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை!

Pagetamil

கலை பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு இன்மை தொடர்பான விசேட கணக்காய்வு நாளை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!