டுபாயில் ஹொட்டலொன்றின் பால்கனியில் நிர்வாணமாக புகைப்படத்தில் தோன்றிய யுவதிகளின் வீடியோ வைரலானதையடுத்து, அந்த நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
நிர்வாணம் மற்றும் பிற ‘மோசமான நடத்தை’ உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பொது ஒழுக்கச் சட்டத்தின் மீறல்களின்படி ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் 5,000 திர்ஹாம் (£ 983) அபராதமும் விதிக்க முடியும்.
இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரியாவை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் சட்டங்களின் கீழ் ஆபாசப் பொருட்களைப் பகிர்வது சிறைத்தண்டனை மற்றும் 500,000 திர்ஹாம் வரை அபராதம் விதிக்கப்படும்.
நிர்வாண போட்டோஷூட்டில் உள்ள 15 மொடல்கள் ஒரு இஸ்ரேலிய வலைத்தளத்திற்கான விளம்பரத்திற்காகவே நிர்வாணமாக காட்சியளித்துள்ளனர். அமெரிக்காவை தளமாக கொண்ட ஒரு ஆபாச வலைத்தளத்தின் இஸ்ரேலிய பதிப்பு என்று நம்பப்படுகிறது.
சனிக்கிழமையன்று, டுபாயின் மெரினா சுற்றுப்புறத்தில் பகலில், பால்கனியில் 15 பெண்களும் நிர்வாணமாக வரிசையில் நிற்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவின.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பொதுவில் முத்தமிடுவது அல்லது உரிமம் இல்லாமல் மது அருந்துவது போன்றவை குற்றமாகும்.
‘அநாகரீகமான’ வீடியோ தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டுபாய் போலீசார் தெரிவித்தனர்.
‘இதுபோன்ற ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகள், எமிராட்டி சமுதாயத்தின் மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கவில்லை’ என்று பொலிஸ் அறிக்கை கூறியது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மத்திய கிழக்கு அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது பல விஷயங்களில் தாராளமயமாக இருக்கும்போது, ஆடை தொடர்பான வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் கடுமையான சட்டங்களைக் கொண்டுள்ளது.
நாட்டின் பெரும்பான்மையான அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முக்கிய ஆபாச வலைத்தளங்களுக்கான அணுகலைத் தடுக்கின்றன.