உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு நீதி வேண்டும்: மன்னார் மறை மாவட்ட ஆயர்

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு உண்மையான ஒரு நீதியும் உண்மையான தீர்ப்பும் கிடைக்கப் பெற வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் விடுத்துள்ள செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

எமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் செய்யப்பட்டு மீண்டும் உயிர் பெற்றர். இந்த நாளிலே நாங்கள் மகிழ்ச்சி அடைவதற்கு காரணம் இயேசு நாதர் எமக்காக உயிரையே தியாகம் செய்தார்.

ஆனால் அவருடைய வாழ்க்கை முடிவடையவில்லை. அவர் அதை தாண்டி சென்று மீண்டும் உயிர் பெற்றார். அப்படியாக உயிர் பெற்று இயேசுநாதர் இன்றும் வாழ்கின்றார்.

நாங்கள் இந்த உயிர்த்த ஞாயிறு அன்று இதற்கு முன்பாக இரண்டு வருடங்களுக்கு முன்பு பாஸ்கா திருவிழா அன்று திருப்பலிக்காக சென்றிருந்த எத்தனையோ மக்கள் குண்டுவெடிப்பு காரணமாக உயிர் இழந்தார்கள். அவர்களை இன்றைய தினம் நாம் விசேடமாக நினைவு கூறுவோம்.

அவர்களுக்கு உண்மையான ஒரு நீதியும் உண்மையான தீர்ப்பும் கிடைக்கப் பெற வேண்டும் என்று நாம் இறைவனிடம் மன்றாடுவோம்.

அத்தோடு இன்றைய கால கட்டத்தில் இந்த கொரோனா நோயால் நாங்கள் மிகவும் அச்சுறுத்தப்பட்டு வாழுகின்றோம். இப்படியான நேரங்களில் நாங்கள் சில நேரம் தேவாலயத்திற்கு சென்று திருப்பலியில் கலந்து கொள்ள முடியாத நிலை கூட காணப்படலாம்.
இருந்தாலும் நாம் வீடுகளிலேயே இருந்து இந்த உயிர்த்த இயேசுவை மகிழ்சியாக கொண்டாடுவோம்.

உயிர்த்த இயேசு நமக்கு வெற்றியை பெற்று தருவார் என்ற நம்பிக்கையுடன் எமது வாழ்கையை சிறப்பாக கொண்டு செல்வோம். இந்த உயிர்ப்பு விழா உங்களிலும் உங்கள் குடும்பங்களிலும் புத்துணர்சியையும் புது வாழ்வையும் தரவேண்டும்.

நீங்கள் புத்துயிர் பெற்றவர்களாக இந்த உயிர்த்த யேசுவின் மக்களாக நாங்களுக்கு ஆசிக்கின்றோம்.என மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை விடுத்துள்ள ஆசிச் செய்தியில் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

வட்டமடு விவசாயிகளுக்கு இன பாகுபாடு- கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வட்டமடு விவசாயிகளின் வாழ்வாதார நிலங்களில் விவசாயம் செய்வதற்குத் திருக்கோவில் பிரதேச செயலாளர்...

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்: யாழ். பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக் கண்காட்சி ஆரம்பம்

சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்காட்சி, சர்வதேச மொழிபெயர்ப்பு...

ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம்! செம்மணி புதைபுழி வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ் மேலதிக நீதவான் லெனின்குமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்