வவுனியாவில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை மோதிவிட்டு தப்பி சென்ற முச்சக்கரவண்டி

Date:

வவுனியா குருமண்காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை முச்சக்கரவண்டியொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இரவு 7.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக அவ்விடத்தில் நின்றவர்கள் தெரிவித்த நிலையில் முச்சக்கரவண்டியின் சாரதி மது போதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவித்ததும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் அங்கிருந்தவர்களால் உடனடியாக வவுனியா போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்திய NP QU 9554 என்ற இலக்கமுடைய நீல நிற முச்சக்கரவண்டியின் சாரதி குறித்த இடத்தில் நிற்காமல் விபத்தை ஏற்படுத்தியதும் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இவ்விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு காலதாமதமாக வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் திருநாவல்குளத்தில் உள்ள முச்சக்கரவண்டி சாரதியின் வீட்டிற்கும் சென்றிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்