மன்னார் மறைமாவட்ட ஆயரின் பூதவுடல் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு

Date:

மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடலுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(4) மூன்றாவது நாளாகவும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆயரின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

மாலை 3 மயிளவில் ஆயர் இல்லத்தில் இருந்து ஊர்தி பவனியூடாக பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலை சந்தியூடாக மன்னார் பொது விளையாட்டு மைதான சந்தியை சென்றடையும். அங்கிருந்து பெரிய கடை வழியாக மன்னார் நகரப்பகுதியில் வந்தடைந்து அங்கிருந்து மன்னார் நகரப்பகுதியில் உள்ள வீதி சுற்றுவட்டம் வழியாக சென்று மன்னார் புனித செபஸ்டியார் பேராலய வீதியூடாக டெலிகொம் சந்தியை சென்றடையும்.

ஆங்கிருந்து ஆயரின் திருவுடல் தாங்கிய ஊர்தி செபஸ்தியார் பேராலயத்தினை சென்றடயும்.

பின்னர் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்hக பூதவுடல் வைக்கப்படும். நாளை திங்கட்கிழமை மதியம் 2 மணி வரை அஞ்சலிங்கு வைக்கப்பட்டு மாலை 3 மணியளவில் இலங்கையில் உள்ள மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன்,ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

11 கொலைகள் செய்த பாதாள உலக துப்பாக்கிதாரிக்கு தமிழ் பெயரில் போலி அடையாள அட்டை: வசமாக சிக்கிய விதானையார்!

தலங்கம, அகுரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் சட்டத்தரணி மற்றும்...

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்