யாழ்ப்பாணம், கல்லுண்டாய் பகுதியில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரை தேடி வந்தவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
யாழ் நகரப்பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றும் இளைஞன் ஒருவர், பணி முடிந்து கல்லுண்டாயினால் வீடு திரும்பியுள்ளார். இனம்தெரியாதவர்கள் அவரை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவத்தை அறிந்து, அந்த இடத்திற்கு வந்த ஒருவரை அராலி பாலத்தடியில் வழிமறித்தவர்கள், கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1