இனத்தின் விடிவிற்காய் இறை பணியோடு இணைத்து இறுதி வரை போராடியவர்

Date:

இரும்பு மனிதனாய் இதய சுத்தியோடு இனத்தின் விடிவிற்காய் இறை பணியோடு இணைத்து இறுதி வரை போராடிய இறைவனின் அடியவரே எமது ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

புள்ளி விபரங்களில் புலியாய் வெள்ளை ஆடையணிந்த புலியென எதிர்ப்பாளர்களினால் வர்ணிக்கப்பட்ட அஞ்சாத நெஞ்சன் இன்று அமைதியாய் துயில் கொள்கிறார்.

கம்பீரமான தோற்றம் கொண்டு சர்வதேசம் வரை எம் அநீதிகளை கொண்டு சென்ற ஆண்டகை எந்த நேரமும் மக்கள் நலனை மட்டுமே சிந்தித்து போராடிய ஒரு தலை மகனை இன்று தேசம் இழந்துள்ளது.

விடை காண முடியாத புதிராய் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்ட நம் உரிமைக் குரலை ஒட்டு மொத்தமாய் முடக்கினர்.

அந்த உத்தம மனிதன் இன மத பேதமின்றி நீதிக்காய் உழைத்த ஒரு உத்தமன் இன்று நிரந்தரமாய் துயில் கொள்கிறார். அவரின் கனவுகள் நிச்சயம் நிறை வேறும் அமைதியாய் உறங்குங்கள் தந்தையே என குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

7 நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது

அமெரிக்காவுடன் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஈரானின் ஏழு...

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கிறார் அமைச்சர்” – நீதிமன்றம் செல்லத் தயாராகும் கடற்றொழில் இணையம்

மீனவர்களின் வாழ்வியலை சிதைக்கும் கடல் தொழில் அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற வழக்கினை...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழில் கைது

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்