நேற்று (31) நாட்டில் 264 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதை தொடர்ந்து, அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 92,706 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 238 பேர், மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து ஆறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,910 ஆக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அண்மையில் நாட்டுக்கு வந்த 20 பேர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது 2,887 நபர்கள் நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த 161 பேர் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,251 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்று சந்தேகத்தில் 353 பேர் தற்போது கண்காணிப்பில் உள்ளனர்.



