26 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

3 நாள் துக்கதினம் அனுட்டிப்போம்: செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு!

மன்னார் மாவட்டத்தின் முன்னாள் ஆயரின் மறைவு தமிழினத்திற்கு பேரிழப்பாகும். இதற்காக தமிழர்கள் அனைவரும் மூன்று நாட்களுக்கு துக்க தினம்அனுஷ்டிக்க வேண்டும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

இது தொடர்பாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  விடுத்துள்ள அறிக்கையில்

யுத்தகாலத்தில் இன மத மொழி பேதம் பாராமல் மனிதம் மட்டுமே மேன்மை என கருதி அனைத்து மக்களுக்குமான சேவைகளை வழங்கியவர் முன்னாள் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள்.

இராயப்பு ஜோசப் அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று (1)அதிகாலையில் இயற்கை எய்தினார் அவரது இழப்பானது எமது தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது

ஆயர் அவர்கள் அனைத்து மதங்களையும் ஒரே மாதிரியாகவே பார்த்து வந்துள்ளார் இதனால் மதத்தலைவர்கள் பிற மதத்தவர்களின் அன்பை அதிகமாக பெற்றவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை என்றால் அது மிகையாகாது

யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்காக அயராது பாடுபட்டவர் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காகவும் அரசியல் கைதிகளுக்கும் ஓடிஓடி உழைத்தவர்

தமிழ் மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சுய கௌரவத்துடனும் வாழ வேண்டுமென்பதில் உறுதியான பற்றோடு இருந்தவர்

இன்று அவர் எம்மை விட்டு பிரிந்து உள்ளார் ஆகவே எமது ஆயரின் ஆன்மா சாந்தி அடைவதற்காக அனைத்து மக்களின் வீடுகளிலும் கருப்புக் கொடிகளை பறக்கவிட்டு மூன்று நாட்கள் துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்று கேட்டு நிற்கின்றேன் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்

Pagetamil

உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

east tamil

90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் தீர்மானம்

east tamil

முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது

east tamil

இனவாத வெறியாட்டத்துக்கு நிறுத்தம்: வன்முறையாளர்களுக்கு சிறைத்தண்டனை எச்சரிக்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

east tamil

Leave a Comment