30.1 C
Jaffna
April 14, 2021

இலங்கை

பல்லச்சுட்டியில் நடந்தது என்ன?- தாக்கப்பட்டவர்கள் தரப்பு விளக்கம்!

இளவாலை, பல்லச்சுட்டி பகுதியில் அண்மையில் குடும்ப விவகாரத்தினால் ஏற்பட்ட மோதல் குறித்து தமிழ் பக்கம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த மோதலில், இருவர் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த மோதல், வாள்வெட்டு குழுக்களுடன் தொடர்புடையதல்ல, குடும்ப விவகாரம் என தாக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் தரப்பினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சகோதரிக்காக, சகோதரர் மற்றும் நண்பர்கள் குழுவினரே, பிரிந்து வாழும் கணவர் தரப்பின் வீட்டிற்கு சென்றனர், அவர்கள் வன்முறை குழு அல்லவென அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இந்த மோதலின் பின்னணி சம்பவங்கள் குறித்து, விலாவாரியான விளக்கமொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.

குடும்ப வாழ்க்கையில் சந்தித்த கொடுமைகளினால் பிரிந்து வாழ முற்பட்ட நிலையிலும், கணவன் தரப்பிலிருந்து சந்தித்த நெருக்கடிகளை விளக்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இரு தரப்பிற்குமிடையில் நீண்டநாள் மோதல் நிலவி வந்துள்ளது.

பிரிந்து வாழும் கணவரால், மனைவியின் சகோதரன் ஏற்கனவே தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சையும் பெற்றுள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.

இது குடும்ப விவகாரம் என்பதால், அந்த விளக்கத்தை தமிழ்பக்கம் முழுமையாக பிரசுரிப்பதை தவிர்த்துக் கொள்கிறது.

எனினும், ஏற்கனவே இந்த விவகாரத்தை செய்தியாக பிரசுரித்ததன் அடிப்படையில், பிரிந்து வாழும் மனைவி தரப்பினர் அனுப்பி வைத்துள்ள விளக்கத்தில்- மோதல் நடந்த அன்று நடந்தது என்ன என குறிப்பிடப்பட்டிருந்த சம்பவங்களை மட்டும் பிரசுரிக்கிறோம்.

அந்த விளக்கத்தின்படி,

24ம் திகதி அன்று மனைவியின் சகோதரன் கோயிலுக்கு சென்றார். சகோதரியின் குழந்தையையும் அழைத்து சென்றார். கோயிலில், கணவரின் சகோதரன், மனைவியின் சகோதரனிடமிருந்து குழந்தையை பறிக்க முற்பட,  குழந்தை அழ, “தாயாரின் சம்மதம் இன்றி பிள்ளையை தரமாட்டேன்“ என்று கூறியுள்ளார். அவர் மீது தாக்குதல் நடத்த முற்பட, அவர் அங்கிருந்து தப்பித்து வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்தார்.

25ம் திகதி காலையில் திருவிழா நடக்கும் போது பொலிஸார் கோயிலுக்கு வந்து மனைவியின் சகோதரனிடமும், கணவரின் சகோதரனிடமும் 4.00 மணிக்கு பொலிஸ் நிலையத்திற்கு வரும்படி கூறிவிட்டு சென்றனர்.

அவர்கள் கூறிவிட்டு சென்ற பத்து நிமிடத்திற்குள் ணவரும் அவரின் இரண்டு அண்ணன்மார்களும் சேர்ந்து, மனைவியின் இரண்டாவது சகோதரனை கோயிலில் வைத்து சரமாரியாக தாக்கினர். அவரது மூத்த சகோதரன் வேலைக்கு சென்றுவிட்டார். அவருக்கு தொலைபேசி மூலம் அறிவித்தோம். அதன் பிற்பாடு மூத்த சகோதரன் வேலையால் வந்து இரண்டு சகோதரர்களும் சேர்ந்து நியாயம் கேட்க, கணவர் வீட்டிற்கு தற்காப்புக்காக கிரிக்கட் மட்டையையும் கொண்டு சென்றனர். அப்போது பிறந்தநாள் வைபவத்திற்கு சென்று விட்டு அவ்வழியாக வந்த  மூத்த சகோதரனின் நண்பர்கள் என்ன பிரச்சனை என்று விசாரித்தார்கள். விசாரிக்கும் போது அது கைகலப்பாக மாற அவர்கள் ஊர்காரரின் அனுதாபத்தை தேட ஊர்காரரிடம் வெளியாட்களை கூட்டி வந்து எங்களுக்கு அடிக்கிறார்கள் என்று கூற ஊர்மக்கள் எல்லோரும் சேர்ந்து வந்து அவர்களை தாக்கிவிட்டு அவர்கள் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும்,மனைவியின் சகோதரனின் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டு, அவர்களில் இருவரைப் பிடித்து கூலிப்படை ரவுடிகள் என்று கூறி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் காயப்பட்டதன் காரணமாக பொலிஸார் அவர்களை தெல்லிப்பளை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு சென்றுவிட்டனர். இதற்குள் கணவர் வீட்டார் தங்கள் வீட்டு உடைந்த பந்தல் கதிரைகளை போட்டுவிட்டு அலுமாரி கண்ணாடியையும் உடைத்துவிட்டு கூலிப்படைகள் உடைத்ததாக கதையை திரிவுபடுத்திவிட்டனர். அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் அல்ல. பிரிந்த மனைவியின் மூத்த சகோதரனின் நண்பர்கள்“ என விளக்கமளத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!

Pagetamil

அமெரிக்க வங்கியில் நூதன கொள்ளை: வங்கிக் கணக்கில் பெருந்தொகை பணத்துடன் சாவகச்சேரி நபர் கைது!

Pagetamil

ஆட்சிக்கு வர அரசுக்கு ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது என்ற கோணத்தில் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்: மனோ கணேசன்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!