நேற்று 264 தொற்றாளர்கள்!

Date:

நேற்று (31) நாட்டில்  264 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதை தொடர்ந்து, அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 92,706 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 238 பேர், மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து ஆறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,910 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அண்மையில் நாட்டுக்கு வந்த 20 பேர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது 2,887 நபர்கள் நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, தொற்றிலிருந்து குணமடைந்த 161 பேர் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,251 ஆக உயர்ந்தது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 353 பேர் தற்போது கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வடக்கில் நிரந்தர நியமனம் கோரும் வெலிஓயா சிங்கள தொண்டர் ஆசிரியர்கள்

முல்லைத்தீவு, வெலிஓயா பிரதேச சிங்கள மொழிப் பாடசாலைகளில் நீண்ட காலமாகத் தொண்டர்...

இனியபாரதி பயங்கரவாத தடைச்சட்டத்திலிருந்து விடுவிப்பு

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனித...

பாதாள உலகத்துடன் தொடர்பா?: டிஐஜி வருண ஜெயசுந்தரவிடம் விசாரணை!

இந்தோனேசியாவிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பாதாள உலக போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கெஹெல்பத்தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்