காலமானார் முன்னாள் ஆயர் இராஜப்பு ஜோசெப்!

Date:

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை தனது 80வது வயதில் இன்று வியாழக்கிழமை (1) அதிகாலை சுகயீனம் காரணமாக காலமாகினார்.

மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நீண்ட காலம் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த மறைமாவட்ட ஆயர், யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் காலமானாதாக அவர் தெரிவித்தார்.

ஆயரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என குரு முதல்வர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை மிக தீவிரமாக ஆதரித்த அவர், அதற்காக தனது இறுதி மூச்சுவரை குரல் கொடுத்தார். தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தினாலும் மதிக்கப்படும் ஒருவராக விளங்கிய ஆயரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பே.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்