26.3 C
Jaffna
December 20, 2024
Pagetamil
குற்றம்

பேசாலை கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்பு!

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 4ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் 46 கிலோ கிராம் எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்க வின் பணிப்பில், பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சோமயித், உப பொலிஸ் பரிசோதகர் விவேகாணந் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் சுமார் 46 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

Pagetamil

போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

Pagetamil

UPDATE: கணவருடன் அடிக்கடி சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிததற்கு காரணம் இதுவா?: மனைவியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

Pagetamil

கணவன் முறைப்பாடு: சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மனைவி கைது!

Pagetamil

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil

Leave a Comment