சார்ஜ் ஏற்றப்பட்ட நிலையிலிருந்த தொலைபேசியில் உரையாடியபடி, குளித்த இளம்பெண்ணொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
ரஷ்யாவின் டோகுச்சினில் உள்ள தனது வீட்டில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அனஸ்தேசியா ஷெர்பினினா (25) மின்சார அதிர்ச்சியால் உயிரிழந்துள்ளார்.
குளியலறைக்குள் விசித்திரமான சத்தம் கேட்டு, 4 வயது மகன் அங்கு சென்ற போது, தாயார் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். தாயாரின் மார்பில் பெரிய தீக்காயத்தை அவதானித்த மகன், அவரை காப்பாற்ற முயன்ற போது, மின் அதிர்ச்சியை உணர்ந்து, தொலைபேசியை மின் இணைப்பிலிருந்து விடுவித்ததன் மூலம், தன்னை காப்பாற்றிக் கொண்டார்.
அனஸ்தேசியாவின் நண்பர் ஒருவர் கூறுகையில், யாரோ ஒருவரின் அழைப்பிற்காக அவர் காத்திருந்தார். அழைப்பு வந்தபோது அவர் சார்ஜரிலிருந்து தொலைபேசியை இழுத்தார். சார்ஜர் வயர் கழறாமல், மின் இணைப்பிலிருந்து சார்ஜர் கழன்று, நீருக்குள் விழுந்ததை தொடர்ந்து, மின் அதிர்ச்சியினால் அவர் உயிரிழந்தார் என தெரிவித்தார்.