வாடிக்கையாளர்களை உளவு பார்ப்பதாக வெளியான தகவலை இலங்கை டெலிகாம்-மொபிடெல் நிறுவனம் மறுத்துள்ளது.
அரச தரப்பு பிரமுகர்கள் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைவரின் தொலைபேசி உரையாடல், தகவல் பரிமாற்றங்களையும் அரசாங்கம் உளவு பார்ப்பதாக அண்மையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.
மொபிடல், டயலொக் உள்ளிட்ட நிறுவனங்களின் பாவனையாளர்களின் தகவல் தொடர்பு விசேட மென்பொருள் ஊடாக கண்காணிக்கப்படுவதாக சமூக ஊடகங்களிலும் தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் மொபிடல் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், SLT-Mobitel உளவு பார்க்கும் மென்பொருளை நிறுவியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு சேவை வழங்குநராக, வாடிக்கையாளர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதிலும், எல்லா நேரங்களிலும் தங்கள் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்வதிலும் அதிக முன்னுரிமை அளிக்கிறார்கள் என்று கூறினார்.