சுயெஸ் கால்வாயை இன்று செவ்வாய்க்கிழமை 140 கப்பல்கள் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றிரவு கால்வால் போக்குவரத்தை தடுத்திருந்த சரக்குக் கப்பல் அகற்றப்பட்டதை அடுத்து இந்தக் கப்பல்கள் செல்ல முடிகின்றன.
மார்ச் 23ஆம் திகதி முதல் கால்வாயில் சிக்கிய 400 மீட்டர் நீளமான ‘எவர் கிவர்’ சரக்குக் கப்பலை சில கப்பல்கள் வெற்றிகரமாக இழுத்தன. முன்னதாக ஏற்பட்ட கப்பல் போக்குவரத்து நெரிசலில் கிட்டத்தட்ட 422 கப்பல்கள் செல்ல இயலாமல் சிக்கின.
உள்ளூர் நேரம் இரவு 7 மணிக்குள் சுயெஸ் கால்வாயை கிட்டத்தட்ட 95 கப்பல்கள் கடந்து செல்லும் என்று சுயெஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ரெபி தெரிவித்தார். கிட்டத்தட்ட மூன்று நான்கு நாட்களில் கப்பல் போக்குவரத்து எப்போதும் போல் இருக்கும் என்று ரெபி தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1