27.3 C
Jaffna
April 15, 2021

இலங்கை

மகளுக்கு மாப்பிள்ளை தேடி விளம்பரம் செய்த தாயார்; பேசியே மயக்கிய ஆசாமி கைது!

பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் யுவதிகளை பேச்சாலேயே வசியம் செய்து, பின்னர் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து உடைமைகளை கொள்ளையிடும் பலே கில்லாடியை நீர்கொழும்பு குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி கைதானவர், முன்னாள் இராணுவச்சிப்பாய் ஆவார்.

கிரியுல்ல, பொல்பிடிகம, கேகாலை, வரக்காபொல, ஹசலக, உடுதும்பர, சிலாபம்,
அவிசாவளை, அனமடுவ, கெக்கிராவ பகுதிகளிலேயே இந்த ஆசாமி வாய் வரிசையையும், கைவரிசையும் காண்பித்துள்ளார்.

பேருந்தில் பயணிக்கும் இளம், நடுத்தர பெண்களுடன் பேச்சுக்கொடுத்து, பேச்சாலேயே அவர்களை வசியம் செய்து, பின்னர் தன்னிடமிருக்கும் மயக்க மருந்து கலக்கப்பட்ட தின்பண்டங்கள், சொக்லெட், குளிர்பானத்தை அவர்களிற்கு கொடுத்து, அவர்கள் மயங்கியதும் கையடக்கத் தொலைபேசி, கைப்பையை திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய நகை, கையடக்கத் தொலைபேசிகளை திருடியுள்ளது தெரிய வந்துள்ளது.

பத்திரிகையில் வெளியான மணமகன் தேவை விளம்பரத்தில் உள்ள தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு, யுவதியை ஆட்டையை போட்டு பேருந்தில் அழைத்து சென்று, அவரது வங்கி அட்டையை திருடி 200,000 ரூபா பணத்தை திருடிய விவகாரத்தில் ஆசாமி சிக்கியுள்ளார்.

கைதானவர் 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை.

முன்னணி தனியார் வைத்தியசாலையொன்றில் தாதிய உத்தியோகத்தராக பணிபுரியும் 23 வயதான யுவதிக்கு, அவரது தாயார் மணமகன் தேடிக் கொண்டிருந்துள்ளார். பத்திரிகை ஒன்றிலும் விளம்பரம் செய்திருந்தார்.

விளம்பரம் வெளியாகி ஒரு வாரத்தில் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்திற்கு ஆசாமி அழைப்பை ஏற்படுத்தினார். யுவதியின் தயாரின் இலக்கம் அது. தன்னைப்பற்றி போலியான தகவல்களை கொடுத்து, தாயாரையும் பேச்சில் மயக்கியுள்ளார் ஆசாமி.

தாயாருடன் சில நாள் பேசி, மகளை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி, ஒரு வழியாக மகளின் தொலைபேசி இலக்கத்தையும் தாயாரிடமிருந்தே பெற்று விட்டார்.

பின்னர் சில நாட்கள் யுவதியும், ஆசாமியும் தொலைபேசியில் பேசினர்.

ஒருநாள், யுவதியை வெளியே வருமாறும், இருவரும் நேரில் பேசலாமென்றும் அழைத்தார். நீர்கொழும்பு பேருந்து நிலையத்திற்கு யுவதி வந்தால், இருவரும் கொழும்பிற்கு பேருந்தில் சென்று, பேசிக்கொண்டே திரும்பி வரலாமென அழைத்தார்.

இதன்படி, நீர்கொழும்பிலிருந்து ஆசாமியுடன் பேருந்தில் புறப்பட்ட யுவதி, பேசியபடியே அங்கிருந்து திரும்பி வந்தனர். இதன்போது, தன்னிடமிருந்த மயக்க மருந்து கலக்கப்பட்ட கேக், சொக்லட், பானங்களை யுவதிக்கு வழங்கினார்.

பேலியகொட பகுதிக்கு வந்த போது யுவதி மயக்கமடைந்து விட்டார். நீர்கொழும்பில் பேருந்து நின்ற பின் யுவதி எழுப்பப்பட்டார். மயக்கத்திலிருந்து விழித்த யுவதி, தனது மாப்பிள்ளையை தேடினார்.

அவர் எஸ்கேப்.

யுவதயின் கைப்பைக்குள் இருந்த அடையாள அட்டையும் காலி செய்யப்பட்டிருந்தது. பின்னர் அதன்மூலம் 200,000 ரூபா மோசடி செய்யப்பட்டிருந்தது.

யுவதியின் முறைப்பாட்டையடுத்து, தொலைபேசி உரையாடலின் அடிப்படையில் வரவேவ பகுதியில் தாயார் வீட்டில் பதுங்கியிருந்த போது ஆசாமி கைது செய்யப்பட்டார்.

அவர் இராணுவ மருத்துவ சேவைப்பிரிவில் கடமையாற்றியவர். மயக்க மருந்துகள் தொடர்பான அறிவிருந்ததால் இந்தவகை திருட்டை மேற்கொண்டுள்ளார். அவரது வீட்டிலிருந்து மயக்க மருந்த கலக்கப்பட்ட கேக், சொக்லட் என்பள மீட்கப்பட்டன.

அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருபின தம்மை கொடர்பு கொள்ளுமறு கேட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1

Related posts

யாழ் மாநகரசபை பதில் முதல்வராக து.ஈசன்!

Pagetamil

மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் கடலட்டை இனப்பெருக்க நிலையம் திறந்து வைப்பு

Pagetamil

இன்றைய வானிலை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!