நிலாவரை அகழ்வாராய்ச்சி: அச்சுவேலி பொலிசில் இன்று விசாரணை!

Date:

நிலாவரையில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இன்று திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு அச்சுவேலி பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தை மாத இறுதியிலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் நிலாவரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இராணுவத்துடன் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வுப் பணிகளில் ஈடுபடமுயற்சித்தனர்.

இம் முயற்சிகள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளார் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
அம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இருந்து தொடர்நடவடிக்கைகளுக்காக இன்று மாலை 2 மணிக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும்  இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் மேலதிகாரிகளும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஊழல் பெருச்சாளிகளின் மேடையில் புலிகளின் பரப்புரை: சிஐடியில் முறைப்பாடு!

அனுராதபுரத்தில் நடைபெற்ற 'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன' (SLPP) பேரணியில், தமிழீழ விடுதலைப்...

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்