26.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
இலங்கை

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் இரசாயனம் கலந்திருப்பது உறுதி!

இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை என இலங்கை தர கட்டளைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய அப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவற்றை முழுமையாக நிராகரிப்பதாகவும் இலங்கை தர கட்டளைகள் நிறுவகம் தெரிவித்துள்ளது.

எனவே, தரச்சான்று நிறுவகத்தின் பரிசோதனைகள் நிறைவடையும் வரையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் வசமிருந்த தேங்காய் எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்யவும் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் தடை உத்தரவை மீறி எந்தத் தரப்பினரும் இந்த எண்ணெய்யை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய மீனவர் அத்துமீறல்: எதிர்க்கட்சி தமிழ், முஸ்லிம் எம்.பிகளை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள்!

Pagetamil

பாராளுமன்றத்தில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

east tamil

கைதிகள் நலனுக்காக யாழ். சிறையில் கணினி மையம்

east tamil

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

east tamil

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

east tamil

Leave a Comment