யாழ்ப்பாணத்தில் இயங்கும் ரியூப் தமிழ் என்ற யூரியூப் குழுமத்தினர் அடிக்கடி கைதாகுவது வாடிக்கையாகியுள்ள நிலையில், மீண்டும் இன்று இருவர் கைதாகியுள்ளனர்.
எனினும், இம்முறை சற்று தீவிரமான விவகாரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கொழும்பிலிருந்து குற்றப்புலனாய்வு பிரிவினரிற்கு வழங்கப்பட்ட அறிவித்தலின்படி இந்த கைது இடம்பெற்றுள்ளது.
விசேட அதிரடிப்படையினர் அந்த நிறுவனத்தின் அலுவலகத்தை சுற்றிவளைத்து, யாரும் வெளியேற முடியாமல் முற்றுகையிட்ட பின்னர், சிஐடியினர் சோதனை மேற்கொண்டு ஒரு ஆணையும், பெண்ணையும் கைது செய்தனர்.
அலுவலகத்தின் பாவனையிலிருந்த கணினிகள் சிலவற்றையும் மேலதிக விசாரணைக்காக எடுத்து சென்றுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1