ஐ.நா ஒன்றும் செய்ய முடியாது: வீரசேகர வீராப்பு!

Date:

ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை தொடர்பான பிரேரணையை செயற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் ​தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது குறுகிய அரசியல் நோக்கங்களுக்கானதாகும்.

மேலும் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆகவே, இலங்கைக்கு எதிராக தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை செயற்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

அத்துடன் இவ்விடயத்தில் எவரும் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியாது. ஐ.நா.பிரேரணை குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ் – தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்

விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து முகாமில் ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு போலியோ...

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் புவியரசு மறைவு

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான...

புதிய கடற்படை தளபதியாக தமியன் பெர்னாண்டோ நியமனம்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ரியர் அட்மிரல் தமியன் பெர்னாண்டோவை இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்