இலங்கை தமிழரசு கட்சியின் பொத்துவில், திருக்கோவில் பிரதேசத்திற்கான பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரதானிகளை கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
மாலை 3: 30 மணியளவில் கட்சியின் பொத்துவில் தொகுதி தலைவர் கலாநேசன் தலைமையில் நடைபெற்றது .
இந்த கூட்டத்திற்கு தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் , அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில், பொத்துவில் பிரதேச சபை உப தவிசாளர் பெ.பார்த்தீபன், பொத்துவில், திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர் உறுப்பினர்கள், ஜனநாயக போராளி கட்சியின் செயலாளர் நகுலன் உள்ளிட்ட கட்சியின் பிரதானிகளும் கலந்து கொண்டனர்.