அபிவிருத்தி என்ற போர்வையில் எமது வளங்கள் அபகரிக்கப்படுகிறது!

Date:

அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பல பிரதேசங்களின் வளங்கள் அபரிக்கப்படுகின்றது. எமது வடக்க கிழக்கு மக்களை ஏமாற்றி கடந்த காலத்திலே வாக்குகள் பெற்றெடுத்த ஆளுந்தரப்பு அரசியற் பிரமுகர்கள் யாரும் இவை தொடர்பில் குரல்கொடுத்ததாகத் தெரியவில்லை. எங்களுக்குள்ளேயே சிலரை வைத்து பிரச்சினைகளை வளர்த்துவிட்டு அதில் தாங்கள் பலனடைவதற்குப் பலர் முயற்சிக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று திருக்கோவிலில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பல பிரதேசங்களின் வளங்கள் அபரிக்கப்படுகின்றது. இது எமது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது. அம்பாறை மாவட்டத்திலும் இல்மனைட் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. எமது வடக்க கிழக்கு மக்களை ஏமாற்றி கடந்த காலத்திலே வாக்குகள் பெற்றெடுத்த ஆளுந்தரப்பு அரசியற் பிரமுகர்கள் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர்களோ, தெரிவு செய்யப்படாதவர்களோ யாரும் இவை தொடர்பில் குரல்கொடுத்ததாகத் தெரியவில்லை.

கடந்த காலங்களில் அபிவிருத்தி என்ற விடயங்களை நம்மவர்களும் மேற்கொண்டார்கள். ஆனால் அவர்கள் விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் செய்யத்தவறிய ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் விளம்பரப்படுத்தி கடந்த தேர்தலில் எங்களுடைய பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு ஒரு தனிநபரின் செயற்பாடு காரணமாக இருந்தது. எங்களுக்குள்ளேயே சிலரை வைத்து பிரச்சினைகளை வளர்த்துவிட்டு அதில் தாங்கள் பலனடைவதற்குப் பலர் முயற்சிக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.

-சந்திரன் குமணன்-

spot_imgspot_img

More like this
Related

நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை....

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...

தையிட்டி காணி ஆக்கிரமிப்பு மற்றும் பொய் வழக்குகளுக்கு எதிராகத் தளராது போராடுவோம்!

தையிட்டியில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துப் பிரம்மாண்ட விகாரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்